search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைக் கோள்"

    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது. விண்ணில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.



    நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.

    செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும். இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Modi #Mission Shakti

    சந்திரனை ஆய்வு செய்ய வரும் அக்டோபர் மாதம் இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டிருந்த சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. #Chandrayaan2postponed
    புதுடெல்லி:

    தகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம்.

    சந்திரனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுமொரு பாகம் 2017-2018 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என முன்னரே இஸ்ரோ அறிவித்திருந்தது.

    அதன்படி அதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. தற்போது ஓரளவு இந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்த நிலையில் 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

    நிலவின் பரப்பு, சந்திரகிரகணம் உள்ளிட்டவை குறித்த தகவல்களைச் சேகரிக்க முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திராயன்-2 ஏவுகணை சுமார் 3,290 கிலோ எடை கொண்டது. நிலவின் சுற்றுப்பாதையில் இதை நிலைநிறுத்தி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக் கெட் மூலம் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த IRNSS-1H செயற்கைகோள் முயற்சியும் சற்று பின்னடைவை சந்தித்தது.

    இதற்கிடையில், நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாகவும் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், வெற்றிகரமான சந்திராயன்-1, மங்கள்யான்-1 திட்டத்துக்கு பின்னர் இரண்டுமுறை சிறிய பின்னடைவை இஸ்ரோ இருமுறை எதிர்கொண்டுள்ளதால் மிகுந்த சரிபார்ப்புக்கு பின்னர் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, அக்டோபர் மாதம் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக, வரும் ஜனவரி மாதத்துக்குள் சந்திராயன்-2 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது. #Chandrayaan2launch #Chandrayaan2postponed #Chandrayaan2againpostponed
    ×